யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த டெல்லி எம்.எல்.ஏ கைது!

யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த டெல்லி எம்.எல்.ஏ கைது!

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசை கடுமையாக விமர்சித்ததாகக் கூறி,  டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி கைது செய்யப்பட்டுள்ளார். 

டெல்லி எம்.எல்.ஏ சோம்நாத் பார்தி, உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியே வந்தபோது ஒரு இளைஞர் மை வீசினார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஒரு வீடியோ கிளிப்பின்படி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ, “குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் நாய்களால் உருவானவர்கள்” என்று இந்தியில் கூறியுள்ளார். அவர் மீது மை வீசப்பட்ட சிறிது நேரத்திலேயே, பார்தி இந்த வீடியோ கிளிப்பை ரீட்வீட் செய்து, ஆதித்யநாத்தை அவமதிக்கும் வார்த்தையைப் பயன்படுத்தி கேள்வியெழுப்பினார். இதையடுத்து சோம்நாத் பாரதியை ரேபரேலியில் அமேதி போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தனது ட்விட்டர் பதிவில், ”யோகி ஜி, எங்கள் எம்.எல்.ஏ சோம்நாத் பாரதி ஜி உங்கள் அரசுப் பள்ளியைப் பார்க்கப் போகிறார். நீங்கள் அவரை நோக்கி மை வீசுகிறீர்களா? பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். 

உங்கள் பள்ளிகள் மோசமானவையா? யாராவது உங்கள் பள்ளியைப் பார்க்கச் சென்றால், ஏன் நீங்கள் மிகவும் பயப்படுகிறீர்கள்? உங்கள் மாநில பள்ளிகளை சரிசெய்யவும், அதை எப்படி செய்வது என்று தெரியாவிட்டால், மணீஷ் சிசோடியாவிடம் கேளுங்கள்” என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.4%
 • அனுபவக் குறைவு
  24.39%
 • கிரிக்கெட் அரசியல்
  35.54%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்