மு.க. ஸ்டாலின் பதவி விலக தயாரா?: பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி.

தனது மகனுக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்கும் தொடர்பு உள்ளதாக சிறு ஆதாரம் கொடுத்தாலும் அரசியலை விட்டு விலக தயார் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் திமுகவினரை கண்டித்து, அதிமுக சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "எனது மகனை பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புபடுத்தி திமுகவினர் பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வகையில், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சொன்னதே நான்தான். திமுக தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது மட்டும், எனது பெயரையும், எனது மகன் பெயரையும் இந்த வழக்கில் எக்காரணம் கொண்டும் தொடர்புபடுத்தி பேச மாட்டேன் என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துள்ளார். இந்த வழக்கில், எனது மகனுக்கு தொடர்பு உள்ளதாக ஒரு சிறு ஆதாரத்தை கொடுத்தால் கூட எனது, 50 ஆண்டு கால அரசியல் பொதுவாழ்க்கையில் இருந்து விலகிவிடுகிறேன். அப்படி கொடுக்க இயலவில்லை என்றால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவி விலக தயாரா? என கேள்வி எழுப்பினார்.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை