பரபரப்பான சூழலில் பிரதமரை சந்திக்கிறார் தமிழக முதல்வர்..!

பரபரப்பான சூழலில் பிரதமரை சந்திக்கிறார் தமிழக முதல்வர்..!

பிரதமர் மோடியை வரும் 18-ம் தேதி நேரில் சந்தித்து தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். 

ஆனால் அதிமுகவின் கூட்டணியில் உள்ள பாஜக தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மேலிடம் அறிவிக்கும் என கூறி குழப்பத்தை ஏற்படுத்தி வந்தனர். இதனை மறுத்த அதிமுக எங்கள் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என தெரிவித்திருந்தது. சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும் அதிமுகவின் கூட்டணியில் தான் பாஜக தற்போதும் உள்ளது என தலைவர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வரவுள்ளார். அப்போது அதிமுக பாஜக கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் கசிந்தன. ஆனால் ஜேபி நட்டா துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மட்டுமே சென்னை வருவதாகவும் அப்போது பாஜக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 இதனால் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி குறித்த இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக ஜனவரி 18-ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது ஜெயலலிதாவின் நினைவிட திறப்பிற்கு பிரதமருக்கு அழைப்பு விடுக்கவுள்ளார் முதல்வர் பழனிசாமி. மேலும்,

இந்த சந்திப்பின் போது தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான அதிமுக - பாஜக கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.4%
 • அனுபவக் குறைவு
  24.39%
 • கிரிக்கெட் அரசியல்
  35.54%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்