திமுகவில் இணைந்த சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி!

சென்னையின் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான எஸ்.கே.கிருஷ்ணன் இன்று திமுகவில் இணைந்தார்.
நீதித்துறையில் உயர் பொறுப்பில் உள்ள பலரும் அவர்களது பதவிக்காலத்துக்கு பிறகு அரசியல் கட்சிகளில் இணைவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையின் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான எஸ்.கே.கிருஷ்ணன் இன்று(ஜன.11) திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்தவர் எஸ்.கே.கிருஷ்ணன். இவர், இன்று(ஜன.11) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின், தன்னை திமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இதனிடையே இவர் தற்போது இணைவது நான்காவது கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் தமிழ்மாநில காங்கிரஸ், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளில் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 5 ஆண்டுகளில் 4 கட்சிகளுக்கு இவர் மாறியுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு