என்னை மேலும், மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்: ரஜினி பரபரப்பு அறிக்கை

என்னை மேலும், மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்: ரஜினி பரபரப்பு அறிக்கை

தன்னை மேலும் மேலும் ரசிகர்கள் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்திருந்தார். ஆனால் அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவரை அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரபோவதில்லை என்று ரஜினி திட்டவட்டமாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு….

நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓரு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையில் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது.

தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன்.

தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க தமிழ் மக்கள் வளர்க தமிழ்நாடு ஜெய்ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்