மேற்கு வங்க மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி -முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!!

மேற்கு வங்க மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி -முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!!
மேற்கு வங்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொரோனாவை தடுக்க இந்தியாவில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதன்படி வருகின்ற 16ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துவங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரா்களாகச் செயல்படும் 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி முதலில் செலுத்தப்படவுள்ளதாகவும், அதையடுத்து 50 வயதைக் கடந்தோா், இணைநோய் உள்ள 50 வயதுக்குக் குறைவான நபா்கள் என மொத்தமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 “கொரோனா தடுப்பூசியை நிர்வகிக்க மாநில அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசியை மாநில மக்கள் அனைவருக்கும் எந்தவித செலவும் இன்றி வழங்குவதற்கான ஏற்பாடுகளை எங்கள் அரசாங்கம் செய்து வருவதாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்