தமிழகம் வெற்றிநடை போட்டு இருந்தால் நான் ஏன் அரசியலுக்கு வர போகிறேன்? - கமல் ஹாசன் பேட்டி!!

தமிழகம் வெற்றிநடை போட்டு இருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என கோவை விமான நிலையத்தில் கமல் ஹாசன் பேட்டியளித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி மதுரையில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதுவரை 4-கட்டமாக பிரசாரம் நடத்தி முடித்துள்ள கமல்ஹாசன் 5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன்,
தமிழகம் வெற்றிநடை போட்டு இருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன். ஆனால் தமிழகம் வெற்றி நடை போட வில்லை. தமிழகம் ஊழலில் இருப்பிடமாக இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டிய கடமை தனக்கு உள்ளது. விரைவில் தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவோம்.
மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கும் தமிழக அரசின் முடிவை தான் வரவேற்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு