அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்!!
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுக்குழு ஒப்புதல் அளித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று (ஜன.09) காலை நடைபெற்றது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் ஆளும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கபட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1- அதிமுக கூட்டணியை இறுதி செய்ய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2- அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

3- ஜெயலலிதா நினைவிடத்தை உலகப் புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

4- கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5- அரசு பணிகளில் 20% இட ஒதுக்கீட்டை முறைப்படுத்திய தமிழக அரசு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6- தமிழக அரசை விமர்சித்து வரும் ஸ்டாலிக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

7- தீய சக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏகபோக, வாரிசு அரசியலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம் என்று அதிமுகவினர் உறுதியேற்பதாக தீர்மானம்.

8- உலக முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து, வேலை வாய்ப்பை அதிகரித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9- புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10- மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

11- நகர்புற வீட்டுவசதி திட்டத்தில் தமிழகத்தை இணைத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

12- தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

13- டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

14- தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

15- தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்றிட, சுழல்நிதி ஏற்படுத்தி இருக்கும் கழக அரசுக்குப் பாராட்டு  தெரிவித்து 
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

16 - இலங்கையில் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமைகளை வழங்கவும், அதிகார பரவலுக்கு அடித்தளமிட, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டதுமான, மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதைத் தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்