மு.க.ஸ்டாலின், அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்!!

மு.க.ஸ்டாலின், அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்!!
சட்டப் பேரவைத் தேர்தலில் நல்லவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளிப்பார் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சென்னை மண்டல தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவித்த அவர், இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் நல்லவர்களுக்கு ஆதரவு அளிப்பார் என நம்புவதாகக் ஜி.கே.வாசன் கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்