மேற்குவங்க சட்டப்பேரவை ஜனவரி 27ஆம் தேதி கூடுகிறது!!

மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவும் சூழல் மத்தியில் மேற்குவங்க சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. கடந்த முறை நடத்தப்பட்ட கூட்டத்தை போல், அனைத்து உறுப்பினர்களுக்கும் சட்டப்பேரவை கூட்டத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகம், வேளாண் சட்டம், ஜி.எஸ்.டி. பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மேற்குவங்க சட்டப்பேரவை கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு