பச்சைகொடி காட்டாத திமுக... காட்டத்தில் அழகிரி....

பச்சைகொடி காட்டாத திமுக... காட்டத்தில் அழகிரி....


நேற்று நடைப்பெற்ற திமுக சீனியர் நிர்வாகிகள் கூட்டத்தில், திமுகவை விட்டு வெளியேறிய  மூத்த தலைவரும், முக ஸ்டாலினின் சகோதரரான முக அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், முக அழகிரி பற்றி எந்த பேச்சும் அடிப்படவில்லை என்ற தகவல் தற்போது அறிவாலய வட்டாரத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.சில பிரச்சனைகள் காரணமாக திமுகவை விட்டு வெளியேறிய முக அழகிரிக்கு, தமிழகத்தில் பலமாக காலூன்ற நினைக்கும் பாஜக அழைப்புவிடுத்தது.  அப்படி இருந்தும் திமுகவில் சேரும் முனைப்பில் அழகிரி இருந்தார். ஆனால், திமுக தலைமை அதற்கு முனைப்பு காட்டாதது அழகிரிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தள்ளது.

இதுகுறித்து, அறிவாலய வட்டாரங்கள் கூறும்பொழுது, கட்சித் தலைவர் தன் மகன் உதயநிதியுடனே வெற்றியை பகிர நினைப்பதாகவும், மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் பகிர போவதில்லை என்று தெரிவிக்கிறது. 

 மேலும், "2019 நாடாளுமன்ற தேர்தலில்  திமுகவின் வெற்றி பெயரை ஸ்டாலினே எடுத்துக்கொண்டார். அதேபோல சட்டமன்ற தேர்தலிலும் தன் மகனை தாண்டி மற்ற குடும்ப உறுப்பினருடன் அவர் கட்சியின் வெற்றியை பகிரப்போவதில்லை. அதனால்தான் தேர்தல் பிரச்சாரத்திலும் உதயநிதியை முன்னிறுத்தினார். இது அழகிரியை செம்ம கோவத்திற்கு ஆளாக்கியுள்ளது" என தெரிவிக்கின்றது.

சமீபத்தில், முன்னாள் திமுக விவசாயிகள் அமைப்பின் தலைவராக இருந்த கே.பி.ராமலிங்கம் பாஜக-வில் இணைந்தார். மேலும், அவர் அழகிரியை பாஜக-வில் இணைக்க பாடுப்படப் போவதாக கூறியிருந்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்