தடை மீறி போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது...

தடை மீறி போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது...

விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றபோது நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார்.

சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்த நடிகை குஷ்பு அறிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த இன்று காலை சென்னையிலிருந்து கார் மூலம் ஈசிஆர் சாலை வழியாக சிதம்பரம் சென்ற போது நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்தை தொடர்ந்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “அராஜகத்துக்கு நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். இந்த மண்ணின் ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த பாஜக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்