பிகார் தேர்தல் பொதுக் கூட்டத்தில் நாளை பேசுகிறார் நட்டா

பிகார் தேர்தல் பொதுக் கூட்டத்தில் நாளை பேசுகிறார் நட்டா
பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா நாளை கயாவில் பொதுக் கூட்டத்தில் வாக்கு சேகரிக்கிறார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நாளை தொடங்குகிறார்.
இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் மயுக் தெரிவிக்கையில், "கயா பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு முன்பாக பாட்னாவிலுள்ள பிரபல அனுமன் கோயிலில் நட்டா வழிபாடு நடத்துகிறார். அதன்பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயண் வாழ்ந்த இடத்துக்குச் செல்கிறார்" என்றார். இந்தக் கூட்டத்தில் பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் மற்ற மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். 
பிகார் பேரவைத் தேர்தலையொட்டி கட்சியின் மூத்த தலைவர் பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்