அதிமுக அவைத்தலைவர் பதவியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது- மதுசூதனன்

அதிமுக அவைத்தலைவர் பதவியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது- மதுசூதனன்

அதிமுக அவைத்தலைவர் பதவியில் தானே நீடிப்பதாகவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மதுசூதன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் முதலமைச்சருக்கான வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் அவைத்தலைவர் பதிவியில் இருந்து மதுசூதன் மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து அதிமுகவின் அவைத்தலைவர் கூறுகையில், ”அதிமுக அவைத் தலைவர் பதவியை என்னிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாது. அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்து நான் மாற்றப்படுவதாக வெளியான தகவல் தவறு. என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “மதுசூதனன் சாகும் வரை அவர் தான் அவைத் தலைவர் என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறியிருக்கிறார். அதிமுக அவைத் தலைவர் பதவியில் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையனை நியமிக்க சசிகலா திட்டமிட்டார். சசிகலா எவ்வளவோ கூறியும் என்னை அவைத் தலைவர் பதவியில் நீடிக்குமாறு செய்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்” என்று தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்