தமிழர் உணர்வுடன் விளையாட வேண்டாம்...மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..

தமிழர் உணர்வுடன் விளையாட வேண்டாம்...மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..


தமிழர்கள் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, ‘இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது’ என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி..!

இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா..? பாஜக அரசின் பின்புலம் இதற்குக் காரணமா..?

எதுவாக இருந்தாலும் தமிழர்கள் உணர்வுடன் விளையாடாதீர்கள்..! சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்