மோடிக்கு கோவில் கட்டிய தொண்டர்…

மோடிக்கு கோவில் கட்டிய தொண்டர்…

தெலங்கானாமாநிலம், ஹுசூர் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இந்திய பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான இவர், பிரதமரின் உரைகளை தான் வசிக்கும் பகுதி மக்களுக்கு மொழிப்பெயர்த்து,  தனி ஆளாக மோடிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.


பிரதமர் மீதான அலாதியான அன்பு பிரதமர் மோடிக்காக தனது வீட்டு அருகில் சிறு கோவில் கட்டி வழிப்படும் அளவிற்கு இட்டுச் சென்றுள்ளது. கடந்த வியாக்கிழமை இக்கோவில் திறந்து வைக்கப்பட்டது. இக்கோவிலில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வைத்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பூஜை செய்கிறார் சதீஷ். இதனை அப்பகுதியில் உள்ள பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.


நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு மோடியை போன்ற தலைவர் தான் தேவை என்பது இவரது வாதம். தான் பாஜகவின் தொண்டன் என்பதை விட பிரதமர் மோடியின் பக்தன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறார் சதீஷ்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்