ஜெயாபச்சனை தாக்கிய சக்திமான்?

ஜெயாபச்சனை தாக்கிய சக்திமான்?
பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் பயன்பாட்டு விவகாரத்தில் சமாஜ்வாடி எம்.பி.,யும் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில்,  ஜெயா பச்சனை புறக்கணிக்க கூறும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.

90களின் பிரபல சூப்பர் ஹீரோ தொலைகாட்சி தொடரான சக்திமானுக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த தொடரில் சக்திமானாக நடித்த நடிகர் முகேஷ் கண்ணா. இவர் தற்போது ஜெயா பச்சனை தாக்கி இருப்பதுபோன்ற ட்விட்டர் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வைரல் பதிவில், ”நான் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் ஆகிய இருவரையும் புறக்கணிக்கிறேன். யாரெல்லாம் என்னுடன் உள்ளீர்கள்?” என கூறப்பட்டுள்ளது. இதேபோன்ற தகவல் அடங்கிய பல்வேறு ட்வீட்கள் வெளியாகி இருக்கின்றன. 

இந்த ட்விட்டர் பதிவை ஆய்வு செய்ததில், சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டது முகேஷ் கண்ணா பெயரில் இயங்கும் போலி ட்விட்டர் கணக்கு என தெரியவந்துள்ளது. இந்த போலி கணக்கு 2020 செப்டம்பர் மாதத்தில் தான் துவங்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் ஜெயா பச்சனை புறக்கணிக்கக்கோரும் தகவலை சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா பதிவிடவில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன என போலிஸ் தரப்பு கூறியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்