ஜனவரியில் சசிகலா ரிலீஸ்...? என்ன சொல்கிறது சிறை நிர்வாகம்


ஜனவரியில் சசிகலா ரிலீஸ்...?  என்ன சொல்கிறது சிறை நிர்வாகம்


சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா 2021 ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையாகவுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என பெங்களூருவை சேர்ந்த  நரசிம்மமூர்த்தி என்பவர் ஆர்டிஐயின் கீழ் கேட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

அதில் சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாகவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சசிகலா நன்னடத்தை விதிகளின் கீழ் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை என்றும், அவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தியே ஆக வேண்டும் எனவும், அப்படி செலுத்தாத பட்சத்தில் அவர்; 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி விடுதலையாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் பரோல் காலத்தை கணக்கிட்டு விடுதலை தேதி மாறும், தண்டனை காலத்தை முழுமையாக அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார், என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்