போர்க்களமான ஆலோசனைக் கூட்டம் : திருச்சியில் தெறித்து ஓடிய அதிமுகவினர்

போர்க்களமான ஆலோசனைக் கூட்டம் : திருச்சியில் தெறித்து ஓடிய அதிமுகவினர்


திருச்சியில் நடைபெற்ற அதிமுக இளைஞர் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினர் மீது சேர்களை வீசி சிலர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

திருச்சி அடுத்த ஸ்ரீரங்கம் தனியார் மண்டபத்தில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் ஆலோசனைக்கூட்டம், அமைச்சர் பா.வளர்மதி மற்றும் மாவட்ட செயலர் பரஞ்ஜோதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அப்போது  மண்டபத்திற்குள் முத்தரையர் சமுதாயக் கொடியுடன் உள்ளே புகுந்த 30 பேர் , கட்சியில் சரியான நபர்களுக்கு பதவி வழங்கவில்லை, காசுக்காக பதவியை வித்துட்டீங்களே என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்த சேர்களை தூக்கி கட்சியினர் மீது வீசினர். இதனால் கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் கட்சியினர் தெறித்து ஓடினர்.

பின்னர் மேடையை நோக்கி வந்த கும்பல் சிலரை குறிவைத்து தாக்கினர். இதைப் பார்த்த அமைச்சர் பா. வளர்மதி சேர்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டார். பின்னர் வந்த காவல்துறையினர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.7%
 • இல்லை
  27.95%
 • யோசிக்கலாம்
  4.74%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.62%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்