குறைந்தபட்ச அளவு அரசு, அதிகளவில் தனியார் மயம்....ராகுல் ஆவேசம்.


குறைந்தபட்ச அளவு  அரசு, அதிகளவில் தனியார் மயம்....ராகுல் ஆவேசம்.
.

`மோடி அரசின் பங்கீட்டு முறை குறைந்தபட்ச அரசு; அதிகபட்ச தனியார் மயமாக்கலை கொண்டுள்ளது’ என்று ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

 செலவினத் துறையின் அனுமதி பெற்ற பிறகே, அரசு பணிகளுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது; மோடி அரசின் வினியோக முறை, குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச தனியார் மயமாக்கலை அடிப்படையாக கொண்டுள்ளது,’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

மேலும், `கொரோனாவை காரணமாக காட்டி, அரசு அலுவலகங்களில் நிரந்தர ஊழியர்கள் இல்லாமல் ஆக்குவதே பிரதமர் மோடி அரசின் மகத்தான திட்டம். இளைஞர்களின் எதிர்காலத்தை கொள்ளையடித்து தனது நண்பர்களை (அதானி, அம்பானி) ஊக்குவிக்கும் உள்நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்படுகிறார். மக்கள்  இதனை உடனடியாக பிரதமரிடம் கேள்வி எழுப்ப வேண்டும்,’ என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்