ஒரு சதவீதம் கூட ஆதரவு கிடைக்காது… காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த குலாம் நபி ஆசாத்

ஒரு சதவீதம் கூட ஆதரவு கிடைக்காது… காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியின் நியமனந் தலைவருக்கு ஒரு சதவீத ஆதரவி கூட கிடைக்க வாய்ப்பு கிடைக்காது என விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பு குறித்த குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் காரியக் குழுவுக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என குலாம் நபி ஆசாத் உட்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் 23 பேர் கொண்ட குழு சோனியாகாந்திக்கு கடிதம் எழுதினார். இது இன்னும் குழப்பத்தை அதிகரித்துள்ளது. 

இது குறித்து பேட்டியளித்த குலாம் நபி ஆசாத் எனது கட்சி 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியில் இருந்த விரும்பினால், கட்சிக்குள் தேர்தல் நடத்தி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முன்மொழிவை வரவேற்பார்கள். காங்கிரஸை சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் மாற்றுவதே இதன் ஒரே நோக்கம்.அதற்காகவே காரியக் குழுவுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். 

தேர்தலில் போட்டியிட்டு தேர்வாகும் போதுதான், குறைந்தபட்சம் 51 சதவீதம் கட்சியினராவது உங்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆனால் நியமிக்கப்படும் தலைவருக்கு ஒரு சதவீத ஆதரவு கிடைக்காது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதில் என்ன சிக்கல் உள்ளது? இப்போது எங்களை எதிர்ப்பவர்கள், கட்சித் தேர்தல் நடைபெற்றால் காணாமல் போய்விடுவார்கள் என்று அவர்களுக்கே தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்