எனக்கோ என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது… உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

எனக்கோ என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது… உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பிள்ளையார் சிலை புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து உதயநிதி ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மற்றும் அதிமுக அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், ஊழல்களையும் குறித்து நான் பகிரும்போது அவற்றை எடுத்து விவாதப் பொருளாககாதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையின் புகைப்படத்தை பகிர்ந்ததை பரபரப்பாக விவாதிக்கிறார்கள். 

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது  அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப்பிடித்துக் கொண்டு வெவ்வேறு விதமாகக் கயிறுத்திரிப்பதை பார்க்கையில் இங்கு எது நடந்தாலும் அதைக் கழகத்திற்கு எதிராக திருப்பும் சதிவேலைகளை புரிந்து கொள்ள முடிகிறது. 

ஒரு விஷயத்தை இங்கே தெளிவு படுத்த விரும்புகிறேன். எனக்கோ என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என் தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

எங்கள் வீட்டில் ஒரு பூகை அறையும் உண்டு. அதில் எங்கள் மூதாதையர்களின் உருவப்படங்கள் உள்ளன. மேலும் என் தாயார் நம்பும் சில கடவுள் படங்களும் உண்டு. முக்கியமான முடிவெடுக்கும்போது அங்குள்ள மூதாதையர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்துவிட்டு செய்வது வழக்கம்.

இந்நிலையில் பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தார். அதைப்பார்த்த என் மகள் இந்த சிலையை எப்படி செய்வார்கள் என்று கேட்டார். 

களிமண்ணில் செய்வார்கள் என்று கூறினேன். தண்ணீரில் கரைத்து விடுவார்கள் என்று கூறினேன். ஏன் என்ற மகளின் கேள்விக்கு அதுதான் முறை என்கிறார்கள் என்றேன். 

கரைப்பதற்கு முன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொடுங்கள் என்று கேட்டார். அவரின் விருப்பத்தின்பேரில் நான் தான் அந்த புகைப்படத்தை எடுத்தேன். அவர் விருப்பத்தின்பேரிலேயே டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன். அவ்வளவோ” எனத் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்