ஐசியுவில் நிதி நிலைமை:- ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஐசியுவில் நிதி நிலைமை:- ஸ்டாலின் குற்றச்சாட்டு கடன் வாங்குவதை மட்டுமே தனக்குத் தெரிந்த ஒரே 'நிதி நிர்வாக உத்தியாகக் கற்றுள்ள முதலமைச்சர் பழனிசாமி அரசு, கொரோனா பேரிடர் காலத்தில் மிக மோசமாகத் தோல்வியடைந்து, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தாங்க முடியாத கடன் சுமையை ஏற்றி வைத்திருப்பதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒவ்வொரு முறை பிரதமரிடம் பேசும்போதும் 'கொரோனா நிதி' கேட்பதை மட்டும் அறிக்கையாக வெளியிடும் முதலமைச்சர், அப்படிக் கேட்டதில் 10 சதவீத நிதி கூட வரவில்லை என்று வெளிப்படையாக பேசவே அச்சப்படுவதாகவும் கூறியுள்ளார்.

தமிழகத்திற்குக் கிடைத்துள்ள புதிய முதலீடுகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையைக்கூட வெளியிட முடியாத, கையாலாகாத அரசாகவே இன்னும் சில மாதங்களில் இடத்தைக் காலி செய்துவிட்டு, வீட்டுக்குச் செல்லப்போகிறது அ.தி.மு.க. அரசு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனா கால பாதிப்பை மனதில் வைத்து, நிதிநிலை அறிக்கையை மறு ஆய்வு செய்து, எஞ்சியிருக்கும் ஆறு மாதங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்யுமாறு மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்