பிரபல சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
பிரபல சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
துள்ளுவதோ இளமை, சமுத்திரம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து, உதயா, பிஸ்தா என 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
இது குறித்து பிரமிட் நடராஜன் கூறுகையில் 'பாஜகவில் இணைந்தது எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதாகவும், அதர்மம் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ அப்போது தர்மம் கடவுள் ரூபத்தில் தலைகாக்கும். இப்போது அந்த கடவுள் மோடி ரூபத்தில் அதர்மத்தை அழிக்க வந்திருக்கிறார்.
எனக்கு இருக்கின்ற நல்ல பெயர், தொடர்புகளை பாஜகவிற்காக பயன்படுத்துவேன். ராமராக இருக்கக்கூடிய பிரதமர் மோடிக்கு ஒரு அணிலாக என்னால் இயன்ற பணியை செய்வேன்' என்று தெரிவித்தார்.