புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்

 2020-21 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.  

புதுச்சேரியில் கடந்த 20-ம் தேதி துணைநிலை ஆளுநர் உரையும் அதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் நிகழ்வும் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், 19-ம் தேதி இரவு சட்டப்பேரவைக் கூட்டத்தை மற்றொரு நாள் தள்ளிவைக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்குக் கடிதம் அனுப்பினார். ஏனெனில், பட்ஜெட் தொடர்பான கோப்பு தனக்கு வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதனைதொடர்ந்து,முதல்வருக்கும், ஆளுநருக்கு இடையே மாறி மாறி கடிதப் போர் நடைபெற்றது. இந்நிலையில் , பட்ஜெட் கோப்புக்கு ஒப்புதல் தரப்படுமா என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் கேட்டதற்கு, "பட்ஜெட்டுக்கு இன்று ஒப்புதல் தந்துள்ளேன். சட்டப்பேரவையில் ஆளுநரான என்னை உரையாற்ற அழைத்தனர். அதன்படி, வரும் 24-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் உரையாற்றுகிறேன்" என்று தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்