தமிழக காங்கிரஸ் கட்சியின் ரூ. 20 ஆயிரம் கோடி சொத்துகள் ராகுல் காந்தியின் கையில்… துக்ளக் குருமூர்த்தி பரபரப்பு புகார்

தமிழக காங்கிரஸ் கட்சியின் ரூ. 20 ஆயிரம் கோடி சொத்துகள் ராகுல் காந்தியின் கையில்… துக்ளக் குருமூர்த்தி பரபரப்பு புகார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளை ராகுல் காந்தி தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு இருப்பதாக துக்ளக் குருமூர்த்தி பரபரப்பு புகார் எழுப்பியுள்ளார். அத்துடன் இதற்கு பல ஆதாரங்களுடன் தன்னிடம் உள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுளார். இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. 

காமராஜர் காலக்கட்டத்தில் இருந்தே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் வாங்கப்பட்டன. அப்போது அதன் செயல்பாட்டை கண்காணிக்கவும், நிர்வாகிக்கவும் ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு தலைவராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் யாரோ அவரே,அது தவிர மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தவிர தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு சொந்தமாக  மற்றும் சொத்துக்கள் குத்தகை மற்றும் வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆண்டு தோறும் பல கோடி வருமானம் அக்கட்சி நிறுவகத்திற்கு வருகிறது.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ள 20 முதல் 50 ஏக்கர் அளவிலான இடத்தில் தற்போது 7 நட்சத்திர ஓட்டல் ஒன்றை கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த ஒப்பந்தம் மும்பையை சேர்ந்த பில்டர் ஒருவருடன் செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஒப்பந்தத்தை ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்க் சிங் என்பவர் மேற்பார்வையில் செயல்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி சொத்துகளை ராகுல் காந்தி நேரடியாக தனது தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்துகிறார் என்ற புகார் எழுந்துள்ளது. 

இதற்கிடையில் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை நிர்வாகிகள் சிலரை டெல்லிக்கு அழைத்து சோனியாவும் ராகுலும் ஆவணங்கள் சிலவற்றில் கையெழுத்து பெற்று திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் சோனியா காந்தி, காங்கிரஸுக்கு சொந்தமான நேசனல் ஹெரால்டின் பத்திரிக்கையின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை தனது குடுமப்த்தின் பெயரில் மாற்றியதாக என ஒரு வழக்கு உள்ளது. அதே போல தற்போது ராகுல் காந்தியும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளையும் அறக்கட்டளையின் நிர்வாகத்தையும் நேரடியாக எடுத்து தன்னுடைய குடும்ப நலனுக்காக பயன்படுத்துவதாக சந்தேகம் தெரிவித்துள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.

மேலும் உண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடத்தை ராகுல் காந்தியின் உதவியாளர் கனிஷ்க் சிங் 7 நட்சத்திர ஓட்டல் ஒன்றை கட்ட மும்பை கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளாரா? மேலும் அறக்கட்டளை நிர்வாகிகள் 2009இல் அழைத்து சோனியாவும் ராகுலும் கையெழுத்து பெற்ற ஆவணங்கள் எங்கே என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கமளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை சோனியா காந்தி குடும்பம் தனிப்பட்ட நலன்களுக்கு பயன்படுத்துவது எப்படி சரியாகும்?என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தன்னிடம் ஏராளமான ஆதரங்கள் இருப்பதாக ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்