ஒரு சிலரை கைது செய்து ஒப்புக்கு கணக்குக் காட்டக் கூடாது" - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

ஒரு சிலரை கைது செய்து ஒப்புக்கு கணக்குக் காட்டக் கூடாது


 வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தலையீட்டால், தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டதை வரவேற்பதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

பன்முனை அழுத்தத்தால் தமிழக அரசு  ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டக் கூடாது என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான தலைமைக் காவலர் ரேவதி, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆகியோருக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் நீதி நியாய வழிமுறைகள் எள்ளளவும் பிசகாமல், அரசு தீவிரமாக எடுத்து நடத்த வேண்டும் என்றும், தந்தை, மகன் கொலை வழக்கு குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்