மீண்டும் கட்சித் தலைமைக்கு திரும்புவாரா ராகுல் காந்தி?

மீண்டும் கட்சித் தலைமைக்கு திரும்புவாரா ராகுல் காந்தி?
டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் காணொலி மூலமாக நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கூட்டத்தில் கட்சி தலைவராக மீண்டும் ராகுல்காந்தி நியமிக்க வேண்டும்
என்று பலர் வலியுறுத்தினர். ஆனாலும், இதுகுறித்து காரியக் கமிட்டியில் விவாதிக்க முடியாது என்று கட்சித் தலைமை இந்த விவாகரத்தை நிராகரித்துவிட்டது. மேலும் கட்சித் தலைமைப் பதவிக்கு திரும்ப மாட்டேன் என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொடர்பான பிரச்சினைகளில் ராகுல் காந்தி தீவிரம் காட்டி வருவதால் அவர் மீண்டும் கட்சி தலைமைக்கு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரான பணிக்காக 11 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சோனியா காந்தி அமைத்துள்ளார். இக்குழுவில் ராகுல் காந்தி இடம்பெற்றிருப்பது அவர் மீண்டும் கட்சித் தலைமைக்கு திரும்புவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்