திமுக கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதி?

திமுக கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதி?

திமுக கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதி என உத்தேசப்பட்டியல் வெளியாகி உள்ளது.

 திமுக கூட்டணியில்

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு

தலா 2 தொகுதிகளும், மதிமுக, முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்கு மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு

தலா ஒரு தொகுதியும் என தொகுதி பிரிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தவிர பிற கட்சிகளுடன்

எந்தெந்த தொகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.





காங்கிரஸ் கட்சிக்கான

தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, இன்று ஒப்பந்தமும் கையெழுத்தானது.





இதனையடுத்து,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில், தொகுதிப் பட்டியலை

திமுக தலைவர் ஸ்டாலின் நாளை அறிவிக்கிறார்.





இந் நிலையில்,

 ஈரோடு தொகுதி மதிமுகவுக்கும், ராமநாதபுரம்

தொகுதி முஸ்லீம் லீக்குக்கும், நாமக்கல் தொகுதி கொங்கு மக்கள் கட்சிக்கும், பெரம்பலூர்

தொகுதி ஐஜேகேவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 

மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர்,

விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர்,

ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, மற்றும்

புதுச்சேரி தொகுதிகளும் மீதமுள்ள தொகுதிகளில் திமுகவும் போட்டியிடும் என்று உத்தேசப்

பட்டியல் வெளியாகி உள்ளது.   

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com