சசிகலாவின் வேட்பாளர் தேர்வு, டிடிவி தினகரனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக 39 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான எஸ்.டி.பி.ஐ., ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. இதேபோல் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதியில் 18 தொகுதிகளிலும், புதுவையில் ஒரு தொகுதியிலும் அமமுக போட்டியிடுகிறது.
அதிமுக, திமுக கூட்டணியில் விருப்பமனு, நேர்காணல் என பிஸியாக இருக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகிகள் மூலம் தொகுதிக்கு 3பேரை தேர்வு செய்த, அதிலிருந்து 2 பேரை தினகரன் தேர்வு செய்து, அதனை பெங்களூரு சிறையில் உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவிடம் இன்று நேரில் வழங்கியதாகவும், அதிலிருந்து ஒரு வேட்பாளரை சசிகலா தேர்வு செய்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த காலங்களில் வேட்பாளர் தேர்வில் ஜெயலலிதாவுக்கு மிக உறுதுணையாக இருந்தவர் சசிகலா என்பதும், அவரது வேட்பாளர் தேர்வு மிக சரியாக இருக்கும் என்றும் அப்போதைய அதிமுகவினர் கூறுவார்கள். அதன்படி இப்போதும் வேட்பாளரின் ஜாதி, தொகுதி நிலவரம், அவரது ஜாதகம் ஆகியவற்றை வைத்து, சசிகலா வேட்பாளர்களை தேர்வு செய்ததாக, தெரிகிறது.
சசிகலாவின் வேட்பாளர் தேர்வு, டிடிவி தினகரனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.