த.மா.காவுக்கு தஞ்சாவூர் தொகுதி… உறுதிபடுத்தினார் ஜி.கே.வாசன்..!

த.மா.காவுக்கு தஞ்சாவூர் தொகுதி… உறுதிபடுத்தினார் ஜி.கே.வாசன்..!

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளதை ஜி.கே.வாசன் உறுதிபடுத்தினார்.

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளதை ஜி.கே.வாசன் உறுதிபடுத்தினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் அந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் சுந்தரபெருமாள் கோவிலில் ஜி.கே.வாசனுக்கு செல்வாக்கு அதிகம். இதனால் தஞ்சாவூர் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக பேட்டி அளித்த ஜி.கே.வாசன், தேசிய நலனில் அக்கறை கொண்ட மாநில கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி  செயல்படுகிறது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதுதான் த.மா.காவின் நிலைப்பாடு.

பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளடக்கிய கூட்டணி வெற்றி கூட்டணி. எங்களது கூட்டணி குறித்து காங்கிரஸ், திமுக ஜீரணிக்க முடியாமல் பேசி வருகிறார்கள்.

தேர்தல் கூட்டணி என்பது வேறு. இயக்கத்தில் கொள்கை என்பது வேறு. எண்ணிக்கை என்பதைவிட, எண்ணத்தின் அடிப்படையில் அதிமுகவுடன்  கூட்டணி அமைத்துள்ளோம்.

கேட்ட தொகுதியை அ.தி.மு.க. கொடுத்துள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com