டிவிட்டர் பக்கத்திலும் புதுவை முதல்வர் நாராயணசாமி, கிரண்பேடி மோதல் போக்கு தொடர்கிறது.
டிவிட்டர் பக்கத்திலும் புதுவை முதல்வர் நாராயணசாமி, கிரண்பேடி மோதல் போக்கு தொடர்கிறது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே அரசு நிர்வாக ரீதியில் அடிக்கடி மோதல் போக்கு இருந்து வருகிறது.
முற்றிப்போன நிலையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டமே நடத்திவிட்டார். அந்த அளவுக்க பெரிதானது நிர்வாக போர்.
இந்தநிலையில் கவர்னர் பேடி டிவிட்டர் பக்கத்தில் ஏதாவது ஒரு தகவலை பதிவிடுவது வழக்கம். அதேபோல் தனது பதிவில், ஜனநாயக கடமையில் ஓட்டளிப்பது முக்கியமான ஒன்று. இது நாட்டின் குடிமகன்கள் அனைவரின் கடமை என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு பதில் அனுப்பிய பிரதமர் மோடி, மக்களின் குரலை வெளிப்படுத்துவதுதான் ஓட்டு. வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வை முக்கிய பிரமுகர்கள் விரிவுபடுத்த வேண்டும். உங்கள் குரலை ஓங்கிஒலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நாராயணசாமி இட்ட பதிவில், பிரதமர் யார்? பா.ஜ.க. பிரதமர் யார்? என்பதை கிரண்பேடி அறிந்துகொள்ள வேண்டும். அரசு பதவியில் இருந்துகொண்டு அரசியல் செய்யக்கூடாது. உங்களின் தலைவர் பிரதமர். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அல்ல. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது ஆகாதா? என குறிப்பிட்டுள்ளார்.