பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாம் தொடர்பாக பொள்ளாச்சி ஜெயராமனின் பதற்றம் சந்தேகத்தை கிளப்புகிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து அதனை விடியோ எடுத்து மிரட்டும் சம்பவம் வெளி உலகிற்கு தெரிய வந்தது. இது அனைவர் மத்தியிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அரசியல் முக்கிய புள்ளிகளின் தலையீடு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை போலீசார் மறுத்துள்ளனர். இந்த வழக்கை இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.
இந்தநிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று டி.டி.வி. தினகரன் சென்று சந்தித்து பேசினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், பொள்ளாச்சி பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை பற்றி கூறும்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பதற்றம் அடைகிறார். இதனால் சந்தேகம் எழுந்துள்ளது.
பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை என்று கூறியுள்ளார்.