இதில் வாரிசு வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, திமுகவிலேயே முணுமுணுப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் 20 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.
இதில் வாரிசு வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, திமுகவிலேயே முணுமுணுப்பு ஏற்பட்டுள்ளது.
திமுகவில் ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி வடசென்னையிலும், பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி கள்ளக் குறிச்சியிலும், தங்கப்பாண்டியனின் மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன் தென் சென்னையிலும், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூரிலும், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் மகன் கதிரவன் கடலூரிலும், முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் மத்திய சென்னையிலும், கருணாநிதியின் மகள் கனிமொழி தூத்துக்குடியிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் வழக்கத்தை விட வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறப்பதாக கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்,.