பல மாதங்கள் நடந்த முதல் மக்களவை தேர்தல் குறித்த சில சுவாராஸ்யமான தகவல்கள்! படங்கள்!

பல மாதங்கள் நடந்த முதல் மக்களவை தேர்தல் குறித்த சில சுவாராஸ்யமான தகவல்கள்! படங்கள்!
பல மாதங்கள் நடந்த முதல் மக்களவை தேர்தல் குறித்த சில சுவாராஸ்யமான தகவல்கள்! படங்கள்!

இந்தியாவில் 1951-52ம் ஆண்டில் முதல் மக்களவை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் பல மாதங்களாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு 1947 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் அடைந்தது. 1950 ஜனவாி 26ம் தேதி குடியரசு நாடாக மாறியது. நாட்டில் முதல் முறையாக 1951ம் ஆண்டுதான் மக்களவை  தேர்தல் நடைபெற்றது. 

இந்தியாவில் முதல் மக்களவை  தேர்தல் 1951 அக்டோபர் 25ம் தேதி முதல் 1952 பிப்ரவாி 21ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 4 மாதங்கள் நடைபெற்ற அந்த தேர்தலில் 489 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களுக்கு 1849 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் 17.3 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். 

முதல் மக்களவை தேர்தலில் 45.7 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் 45 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெற்றது. அந்த கட்சிக்கு 364 இடங்கள் கிடைத்தது. ஜவஹர்லால் நேரு தேசத்தின் முதல் பிரதமராக பதவியேற்றார். 

17வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் தேர்தலில் 82 கோடி பேர்   வாக்களிக்க உாிமை பெற்றுள்ளனர். அதில் 1.5 கோடி பேர் 18 முதல் 19 வயது வரையிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com