மனைவி, மச்சான், மகன் என 3 பேரும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட ஆர்வமாக உள்ள நிலையில், இதில் யாருக்கு விஜயகாந்த் சைகை காட்டுவார் என்று ஏக எதிர்பார்ப்பு....
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி தொகுதி கட்டாயம் வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தனது சொந்த மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகள் கள்ளக்குறிச்சி தொகுதியில் வருகிறது என்று கூறியதுடன், பிரேமலதா நிற்பதாக இருந்தால், அந்த தொகுதியை ஒதுக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியே சம்மதித்ததாக தகவல் வெளியானது.
முதலில் ராஜ்யசபா தொகுதி ஒன்று ஒதுக்குவார்கள், அதை சுதீஷுக்கு கொடுக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அது இல்லை என்று ஆகிவிட்டதால், இப்போது கள்ளக்குறிச்சி வேட்பாளராக போட்டியிட சுதீஷ் ஆர்வமாக இருக்கிறாராம்.
அதேபோல் தேனி தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்த விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரனும், கள்ளக்குறிச்சியில் போட்டியிட ஆர்வமாக உள்ளாராம்.
ஆக, மனைவி, மச்சான், மகன் என 3 பேரும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட ஆர்வமாக உள்ள நிலையில், இதில் யாருக்கு விஜயகாந்த் சைகை காட்டுவார் என்று ஏக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.