18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலிலும், மக்கள் நீதி மையம் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளனர்.
கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனி அணியாக போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் 24ஆம் தேதி, கோவை கொடிசியா ஹாலில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறும் என்றும் அக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலிலும், மக்கள் நீதி மையம் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கான, விருப்பமனுக்களை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும், விருப்ப மனுவுடன் தலா 10 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த தொகுதிகளில் டார்ச் லைட் சின்னத்தில் இக் கட்சியினர் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.