தமிழகத்தில் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகளை வைப்பதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி விட்டதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அரசியல் களம் மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க 702 பறக்கும் படைகள் மற்றும் 702 நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகளை வைப்பதற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் பொதுக்கூட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மக்களை அதிகாரிகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.