வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக,பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன.
வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக,பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள், பாமகவிற்கு 7 தொகுதிகள், தேமுதிகவிற்கு 4 தொகுதிகள், என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சந்தித்து பேசுகிறார். ராமதாஸ் உடன் அன்புமணியும் விஜயகாந்தை சந்திக்கவுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இரு கட்சிகளும் பங்கு பெற்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் களப்பணி குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.