அடுத்தடுத்த ராஜினாமா: திணறும் குஜராத் காங்கிரஸ்!

அடுத்தடுத்த ராஜினாமா: திணறும் குஜராத் காங்கிரஸ்!

குஜாராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

குஜராத்தில் 4 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால், நேற்று 2 எம்எல்ஏக்கள் பதவி விலகிய நிலையில், இன்று மேலும் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.  வரும் ஜூன் 19 ஆம் மாநிலங்களவைத் தேர்தலை சந்திக்க உள்ள அக்கட்சி தலைமைக்கு இது புதிய சிக்கலை உருவாகியுள்ளது.
 
ஆம், அக்சய் பட்டேல், ஜிட்டுபாய் சவுத்திரி, பிரிஜேஷ் மிர்சா ஆகியோர் ராஜினாமா செய்தார். இதுவரை குஜராத்தில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.56%
 • தவறான முடிவு
  20.48%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.95%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.02%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்