மஹாராஷ்டிரா அரசை யாராலும் காப்பாற்ற முடியாது… அமித் ஷா வார்னிங்

மஹாராஷ்டிரா அரசை யாராலும் காப்பாற்ற முடியாது… அமித் ஷா வார்னிங்

மஹாராஷ்டிரா அரசு கூட்டணியில் கருத்து வேறுபாடு வந்து பிரிந்தால், அம்மாநில அரசை யாராலும் காப்பாற்ற முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

மஹாராஷ்டிராவில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனா கட்சி ஆட்சியமைந்துள்ளது. மாநில அரசின் முடிவுகளில் கூட்டணி கட்சிகளிடையே அவ்வபோது கருத்து வேறுபாடு நிலவியது. 

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக அரசின் நடவடிக்கைகள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் முதல்வர் உத்தவ் தாக்கரே கவர்னரை சந்தித்து கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று விளக்கமளித்தார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த சமீபத்திய பேட்டியில், கொரோனா பரவலால் பொருளாதார பாதிப்பு அடையாத நாடு எதுவும் இல்லை. உலக அளவில், இந்தியாவின் நிலை கொரோனாவுக்கு முன் இருந்ததை விட, கொரோனாவுக்கு பின்னர் முன்னேற்றமாக இருக்கும் என்று தான் உறுதியாக கூறுவதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதே அரசின் முதல் இலக்கு என்றும் கூறினார்.

மேலும் மஹாராஷ்டிரா அரசு குறித்து பேசுகையில், அம்மாநில அரசை கலைக்க எந்த ஒரு திரைமறைவு வேலைகளில் பாஜக ஈடுபடாது என்றும் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியிலேயே முழு நோக்கமும் உள்ளதாகவும் கூறினார். 

மேலும் மஹாராஷ்டிராவில் மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளன என்றும் அவர்களுக்குள் ஒத்த கருத்து இருந்தால் ஆட்சிக்கு என்ன ஆபத்து இருக்கப் போகிறது? என்று கூறிய அவர் ஏதாவது ஒரு கட்சி, கருத்து வேறுபாட்டால் கூட்டணியில் இருந்து பிரிந்தால், மஹாராஷ்டிரா அரசை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்