திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது…

தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த பிப்ப்ரவரி மாதம் 15 ஆம் தேதி திமுகவின் அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, அன்பக கட்டிடத்தில் நடந்த கலைஞர் வாசகர் வட்டக் கூட்டத்தில் தலித் மக்கள் குறித்து தவறாகப் பேசியது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச்ச ட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்ததோடு பல இடங்களிலும் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு புகார் மனுவின் கீழ் இன்று அதிகாலை ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலந்தூரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இன்று அதிகாலை மத்திய குற்றப் பிரிவுக் காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். 

மேலும், கைது செய்யும்போது அவர் இருமியதால் அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா தடுப்புகான உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு இருந்ததைச் சுட்டிக்காட்டியதற்காக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி நான் பேசியது சமூக ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.61%
 • தவறானது
  17.9%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.9%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.6%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்