அமெரிக்க பத்திரிக்கை "தி டிப்ளோமேட்" ப.சிதம்பரத்தை ஆகச்சிறந்த இந்திய ஊழல் அரசியல்வாதி என வர்ணித்துள்ளது..!

அமெரிக்க பத்திரிக்கை

கொரோனா தொற்று உலகம் முழுக்கு பல சேதாரங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அமெரிக்காவில் கொரோனா தனது கோர தாண்டவத்தை ஆடியுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில் அமெரிக்க பத்திரிக்கையான தி டிப்ளோமேட் ப.சிதம்பரத்தை ஆகச்சிறந்த இந்திய ஊழல் அரசியல்வாதி என்று வர்ணித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. 

அந்த செய்தியில் இந்திய அரசியலில் உள்ள பல மர்மங்கள் தற்போது பா.சிதம்பரத்தின் வழக்குகளால் வெளியாகி கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் மத்தியில் காரசாரமான பூசல்கள் இருந்தாலும் இரு கட்சிகளுக்கும் மத்தியில் ஒரு நெருக்கமான பிணைப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும், ப.சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான அருண் ஜெட்லி நிதி அமைச்சராக பொருப்பேற்றார். அப்போது சிதம்பரம் மீதான ஊழல் குற்றசாட்டுகளுக்கு எந்த ஒரு பெரிய அளவிலான விசாரணை இல்லை. ஆனால் அருண் ஜெட்லி உடல்நிலை சரி இல்லாததால் நிதி அமைச்சர் பதவில் இருந்து விலகினார். 

அப்போது இருந்து ப.சிதம்பரத்திற்கு எதிராக பலரும் ஒன்று கூடியதாக கூறப்பட்டுள்ளது. 

அதிலும் அந்த செய்தியில் தற்செயலாக சிதம்பரம் ஆகஸ்ட் 21ல் கைது செய்யப்பட்டார், அவரது நெருங்கிய நண்பர் அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24ம் தேதி காலமானார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் நான்கு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அவை இந்தியாவில் சட்டவிரோதமாக எப்படி பணம் செய்யப்பட்டது,நாட்டை விட்டு எவ்வளவு பணம் நகர்த்தப்பட்டது, வெளிநாட்டில் எவ்வளவு பணம் பயன்படுத்தப்பட்டது, எப்படி பணம் இந்தியாவிற்குள் மீண்டும் நகர்த்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிதம்பரமும் அவரது ஆட்களும் தங்கள் பதவிகளை பயன்படுத்தி மக்கள், கொள்கைகள், ஒழுங்குமுறைகள், ஒழுங்குபடுத்துபவர்கள் ஆகியோர் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அதில் இருந்து பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டியதாக "தி டிப்ளோமேட்” வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் சிதம்பரமும் அவரது ஆட்களும் எப்படி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பண பரிவர்தனை செய்யப்பட்டனர், அப்படி செய்யப்பட்ட பணங்கள் இந்தியாவிற்கு மீண்டும் எப்படி கொண்டு வரப்பட்டது என முழுமையாக குறிப்பிட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்