மலிவான அரசியல் செய்கிறார் ஸ்டாலின்… அமைச்சர் விஜயபாஸ்கர் காட்டம்

மலிவான அரசியல் செய்கிறார் ஸ்டாலின்… அமைச்சர் விஜயபாஸ்கர் காட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சிகிச்சை பணிகளில் தமிழக அரசு துரிதமாகவும் சிறப்பாகவும் உள்ளது.

கொரோனா தொற்று உறுதியானவர்களில் இதுவரை 457 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல இதுவரை 1520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 17 பேர் உயிரிழந்துனர்.

இதற்கிடையில் திமுக மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் தற்போது ரேபிட் டெஸ்ட் கருவி விலை குறித்து சந்தேகம் எழுப்பி விமர்சனம் செய்து வருகிறார். 

ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ’கொரோனா ஒரு உலக பேரிடம். வல்லரசு நாடுகளே கொரோனாவை எதிர்கொள்ல முடியாமல் தவித்து வருகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பு பாராட்டத்தக்க வகையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கொரோனா தடுப்பு பணிகளில் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. 

இப்படியொரு உலக பேரிடரை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை. வல்லரசு நாடுகளே தவித்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக எடுத்ததால் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. அப்படி இருக்கையில் இந்த சூழலில் மலிவான அரசியல் செய்வதை எதிர்க்கட்சி தலைவர் தவிர்க்க வேண்டும். மாபெரும் தொற்று நோய் இது மரண விஷயத்தில் மலிவாக அரசியல் செய்யக்கூடாது.

ரேபிட் டெஸ்ட் கருவிகளை மத்திய அரசு நிர்ணயிட்த்த விலைக்கு தான் வாங்கியிருக்கிறோம்.. நம்மை விட அதிக விலை கொடுத்து ஆந்திர அரசு வாங்கியிருக்கிறது. ஆனால் ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவர் அதை விமர்சிக்கவில்லை. இங்கு மட்டும்தான் இந்த விலை இருக்கிறது. இப்படியொரு சூழலில் எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்வது வேதனையளிக்கிறது’ என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்