டார்ச்லைட் கையில இருந்தா போதாது…. கமலை விமர்சித்து எஸ்.வி.சேகர் டீவிட்

டார்ச்லைட் கையில இருந்தா போதாது…. கமலை விமர்சித்து எஸ்.வி.சேகர் டீவிட்

பிரதமர் மோடி பேசியது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன்.பாதுகாப்புக் கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழை மக்களின் வாழ்வாதாரம்,வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்" என்று விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ’சில சமயம் நம்ம படத்துல அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது மாதிரி இல்ல இது.வெறும் டார்ச்லைட் கையில இருந்தா போதாது.அது பிரகாசமா எரிய பாட்டரி தேவை.அதுதான் நம் பிரதமர். இந்த 21 நாள் தேசத்திற்கே ஊரடங்கு.இதில் அரசியல் எதற்கு?உங்கள் ஆலோசனைகளைப் பிரதமரிடமே தெரிவிக்கலாமே’ என்று கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்