ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு இஸ்லாமிய பெண் நன்கொடை?

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 87 வயதான இஸ்லாமிய பெண் ஒருவர் ஆர். எஸ். எஸ் ன் துணை அமைப்பான, சேவா பாரதிக்கு 5 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். 
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த கலிதா பேகம் என்ற 87 வயது மூதாட்டி, இவர் ஹஜ் பயணம் செல்வதற்காக 5 லட்சம் ரூபாய் வரை சேர்த்து வைத்திருந்தார். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஹஜ் பயணம் ரத்தானது. 

ஜம்மு காஷ்மீர் ஊரடங்கின் போது, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் துணை அமைப்பான, சேவா பாரத்தும் இணைந்து அங்குள்ள மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டதாக தெரிகிறது. இதனால் ஈர்க்கப்பட்ட கலிதா பேகம், சேவா பாரத்திற்கு 5 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

இவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள், கலிதா பேகத்தின் மாமனார் ராணுவத்தில் கர்னலாக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான கலிபாவின் மகன் ஃபாரூக் கான் தற்போது ஜம்மு காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னரின் ஆலோசகராக உள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்