வீட்டிலேயே இருப்பதால் எழும் மனநோய் மிகக்கொடுமையானது..அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான சீனிவாசன்

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா என்ற கொடிய தொற்றுநோயால் உலக வர்த்தகமே முடிங்கியுள்ளது. அந்தந்த நாடுகள் அவர்களின் குடிமக்களை காப்பாற்ற தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திருச்சி மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரும், அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான சீனிவாசனுடன் நேர்காணல்…

1)      அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் உள்ளதா?

மின்னல் வேகத்தில் பரவுகிறது என்ற அமைச்சர் சொல்கிறார். ஆனால், அதற்கு தகுந்த நடவடிக்கைகளில் வேகம் இல்லை என்பதே உண்மை. நோய்தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். ஆனால், சென்னையைத்தவிர பெரும்பாலான எந்த மாவட்டத்திலும் தடுப்பு பணிகள் சிறப்பாக இல்லை. திருச்சியில் இன்னும் பல பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்படாமலே உள்ளது. நோய் பரவாமல் இருப்பதற்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி என்பது மிக முக்கியமாது. ஆனால், மாநகராட்சி அதில் மிகவும் மெத்தனத்தை கடைபிடிக்கிறது. அதற்காக ஊழியர்களை நான் குறை கூறவில்லை. ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைநியமனம் செய்து பணியை விரைந்து முடிக்கவேண்டும். அதேபோல், மருத்துவமனைகளில் எக்யூப்மென்ட்டுகளும் குறைவாகவே உள்ளது. திருச்சியில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை சேர்த்தாலும் 200வெண்டிலெட்டர்கள் இருப்பதே கடினம். தற்போது, சூழ்நிலையில் இதை வைத்து சமாளித்து விடலாம். ஆனால், இன்னும் நிலைமை அதிகமானால் கஷ்டம் தான்.

2)      ஊரடங்கு உத்தரவை மக்கள் சரியாக கடைபிடிக்கமால் இருக்கின்றனரே?

வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவில் நிலைகுளைந்து போய் உள்ளது. 6கோடி மக்கள் தொகை கொண்ட இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவர்கள் மக்களின் விகிதாசாரத்தில் சரியான இருந்தும் மக்களை காப்பாற்ற முடியாமல் போராடிக்கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும் போது வரும் காப்பதே சிறந்தது அந்த வகையில் ஊரடங்கு உத்தரவு சரியே. ஆனால், வீட்டியே இருப்பதால் மன இருக்கும் அதிக அளவில் ஏற்படுகிறது. அதன் வெளிப்பாடே மக்கள் சாரை சாரையாக சொந்த ஊர் செல்கின்றனர். அந்த அவலநிலையை கண்ணுடே பார்க்கிறோம். புத்தகம் படிப்பவர்கள், மனத்திடம் கொண்டர்வர்கள் அதை எளிதில் வென்று விடுவார்கள். அல்லது பெரிய வீட்டில் வசிப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே அங்கும் இங்கும் அலைந்து சரிசெய்து கொள்வார்கள். சின்ன வீட்டில் வசிப்பவர்கள் நிலைமை என்ன? இந்தியாவில் 60 சதவீதத்தினர் அப்படிப்பட்டவர்களே. மனநோய் மிகவும் கொடுமையானது. அதை சரிசெய்ய அரசின் நடவடிக்கை என்ன உள்ளது. ஒரு கூலித்தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.1000ஆயிரம் எப்படி சாத்தியப்படும். அடுத்த வரும் நாட்களை எப்படி குடும்பத்தை நடத்துவது என்பதே மக்களின் மனஅளுத்தில் முக்கியமானதாக இருக்கும். அரசு அதை புரிந்து கொண்டு செயல்படவேண்டும். அனைத்து மக்களுக்கும் உணவு சென்றடைகிறாதா என்பதை பார்க்கவேண்டும். அம்மா உணவகத்தை தாண்டி பல இடங்களில் மாநகராட்சியால் உணவு வழங்கப்பட வேண்டும்.

3)      தடியடி, வாகனம் பறிமுதல், கைது உள்ளிட்டவை சரியான நடவடிக்கை தானா?

அது நிச்சயம் தவறான செயல், ஒருவர் முதலில் எங்கு செல்கிறார், எதற்காக செல்கிறார் என்று விசாரணை மேற்கொள்ளவேண்டும். மக்களை அச்சப்படுத்துவதற்காக தொடர்ந்து கைது, தடியடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. மருத்துவர்களையே அடித்து பின்னர் அவர் மருத்துவர் என்று தெரிந்தபிறகு முன்பே சொல்லி இருக்கக்கூடாதா என கேட்டுள்ளனர் காவல் துறையினர். அடிக்கும் முன்பு யார் கேட்டிருக்கவேண்டும். இறந்தவர் உடலை பார்க்க சென்றவை பிடித்து வைத்த சம்பவம் கூட காஞ்சிபுரத்தில் நடந்தது. இந்த போக்கை காவல்துறையினர் மாற்றிக்கொள்ளவேண்டும். அரசு இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4)      மக்களுக்கு கொரோனா குறித்தான விழிப்புணர்வு உள்ளதா?

நம்முடைய மக்கள் எப்பொழும் அலட்சியமாகவே இருப்பவர்கள் தான். விழிப்புணர்வு இன்னும் முழுமையான அளவு இல்லை. இந்த நேரத்தில் புத்திசாலித்தனம் என்பது வீட்டிலியே இருப்பது தான். நம்முடைய நாட்டுக்காக, உலகமக்களின் நம்மைக்காக, எதிர்காலத்திற்காக என்பதை மனதில் வைத்து வீட்டிலியே இருக்கவேண்டும். அதேபோல், வெளிநாடு சென்று வந்தார்கள் உரியபடி அரசிடம் சென்று சொல்லவேண்டும். திருச்சி விமானநிலையத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்துவந்தவர்கள் 2000பேர் ஆனால், அதில் 850 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மீதி தவறான முகவரி, வெளி சுற்றித்திரிவது என உள்ளனர். இது மிகவும் தவறான போக்கு. மக்கள் சுய கட்டுப்பாட்டுடன், சமூக விலகளை கடைப்பிடித்து, நம் முன்னோர்கள் கூற்றுப்படி நடந்தாலே போதுமானது.

5)      கட்சி பணிகள் எப்படி சென்று கொண்டிருக்கிறது? அமமுகவில் இருந்து சிலர் மாற்றுக்கட்சிக்கு சென்றுள்ளனரே காரணம் என்ன?

வெற்றி, தோல்வி ஏற்படும் போது கட்சி மாறுதல் என்பது இயல்பே. அதையெல்லாம் கணக்கில் கொள்ளக்கூடாது. திமுகவில் இருந்து வைகோ விளகியபோது அவருடன் பலர் வந்தனர். அதுபோன்றுதான், அமமுகவில் பலர் இணைந்துள்ளனர். சிலர் சென்றுள்ளனர். சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்குப்பிறகே எதையும் உறுதியாக சொல்லமுடியும். எங்களுடைய கட்சி பணி கொரோனாவால் தற்சமயம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிலைமை சரியான உடன் தொடர்ந்து பணிகள் மேற்கொள்வோம்.

6)      அமமுக தலைவர் டி.டி.வி தினகரன் செயல்பாடுகள் எப்படி உள்ளது?

தான் எடுத்த முடிவுகளில் எந்த ஒரு சமரசம் செய்து கொள்ளாதா தலைவர், அம்மாவிற்கு பிறகு எங்கள் தலைவரே. அவர் சமரசம் செய்திருந்தால் எவ்வளவோ விஷயங்களை சாதித்திருக்க முடியும். ஆனால், தொண்டர்களுக்கா செயல்படும் தலைவர். அவர்கள் முன்னேற்றத்திற்கும், மக்களின் முன்னேற்றத்திற்குமே முக்கியத்துவம் கொடுப்பார் சுயநலத்திற்கு அல்ல.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.61%
 • தவறானது
  17.9%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.9%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.6%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்