ஆண்டிப்பட்டி எங்களுக்கு ஸ்பெஷல் தொகுதி.. அமைச்சர் வேலுமணி!

ஆண்டிப்பட்டி எங்களுக்கு ஸ்பெஷல் தொகுதி.. அமைச்சர் வேலுமணி!

சட்டப்பேரவையில் பேசிய ஆண்டிப்பட்டி தொகுதி திமுக உறுப்பினர் மகாராஜன், ‘கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து ஒரு விஷயத்தை வலியுறுத்தி வருகிறேன். ஆண்டிப்பட்டி தொகுதியில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. குடிக்கவே தண்ணீர் இல்லாத போது, கைகளை கழுவ தண்ணீருக்கு எங்கே போவது? ஜெயலலிதா நின்ற தொகுதி இது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொகுதியில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும்’ என கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, ‘தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி தொகுதி எப்போதுமே எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி தான். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் போட்டியிட்ட தொகுதி இது. அதனால் பல்வேறு திட்டங்களை அந்த தொகுதியில் நிறைவேற்றி வருகிறோம். திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் அதிகளவு மழைப்பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை’ என தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்