அரசியல் சுனாமி வரும்... நடிகர் ரஜினிகாந்தின் தன்னம்பிக்கை உரை!

அரசியல் சுனாமி வரும்... நடிகர் ரஜினிகாந்தின் தன்னம்பிக்கை உரை!

அரசியல் புரட்சி வெடிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பேசியதற்கு எதிராகவும், ஆதரவாகவும் இன்றளவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 

ரஜினி ரசிகர் மன்றத்தினர் ரஜினி பேட்டியில் தெரிவித்த, மாற்றம் இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்ற கருத்தை தமிழகம் முழுவதும் போஸ்டராக அடித்து ஒட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த வரிகளைப் பரப்புகின்றனர்.   

இந்நிலையில் சென்னையில் நடந்த யூடியூப் டிவி ஒன்றின் முதலாம் ஆண்டு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று  பேசிய நடிகர் ரஜினிகாந்த், "அரசியலில் நேரம்தான் வேலை செய்யும். சரியான நேரத்தில் ஒரு சுழல் உருவாகும். எம்.ஜி.ஆர் அதிக ஆண்டுகள் தி.மு.க-வில் இருந்தார், கட்சிக்காக நிறையவே உழைத்தார். கலைஞர் முதல்வராக வருவதற்கு அவரும் ஒரு காரணமாக இருந்தார். கட்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதும் அவர்மீது அனுதாப அலை வீசியது. அதைத் தொடர்ந்து வந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றியடைந்தார். ராஜீவ் காந்தி படுகொலையின் போது தி.மு.க-வுக்கு எதிரான அலை உருவானது. அப்போது தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரானார். ஆந்திராவிலும் என்.டி.ஆர் அலை உருவானது. எனவே, அலை மிகவும் முக்கியமானது. 

நானும் சில நாள்களுக்கு முன்னர் புது புள்ளி ஒன்றை வைத்திருக்கிறேன். அந்தப் புள்ளி அமைதியாக யாருக்கும் தெரியாமல் சுழலாக உருவாகியுள்ளது. வலிமையாக அலையாக அது மாற்றப்பட வேண்டும். அந்த அலை தேர்தல் கரையை நெருங்க அரசியல் சுனாமியாக மாறும். சுனாமியாக மாறுவது ஆண்டவன் கையில் இருக்கிறது" என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்