அரசு உங்களை காப்பாற்றும்.. துரைமுருகனுக்கு விஜயபாஸ்கர் பதில்!

மத்திய அரசு, உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல் ஆகியவற்றைப் பின்பற்றி வருவதாகவும், அதனால் கொரோனா குறித்து மக்கள் அச்சமோ பதட்டமோ அடைய தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் பேசிய தி.மு.க எதிர்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், "கொரோனா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அனைத்து மாவட்ட மக்கள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சில மாநிலங்களில் பேரவையைத் தள்ளி வைத்திருக்கிறார்கள். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் முறையான பரிசோதனை இல்லை. கூட்டம் கூடுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலளித்துள்ள விஜயபாஸ்கர், "சட்டமன்றத்தில் பயமோ, அச்சமோ தேவையில்லை. அரசு உங்களை முழுமையாகக் காப்பாற்றும். முதல்வர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது. அதற்காக ரூ.60 கோடியும் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.7%
 • தவறானது
  17.82%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.96%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்